மொரிஷியஸ், ஓர் அழகிய தீவு. இஃது ஆபிரிக்காக் கண்டத்திற்கு அருகிலே, மடகஸ்கர் என்ற மிகப் பெரிய தீவுக்கு அருகில் உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்காக, 3370 கி.மீ தொலைவிலே இந்தச் சிறிய தீவு அமைந்திருக்கிறது.
உலகப் படத்தை உற்று நோக்கினால் தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் அடையாளம் காண முடியும். இந்தத் தீவின் நீளம் 65 கி.மீ, அகலம் 45 கி.மீ இதன் கடற்கரையின் நீளம் 160 கி.மீ, மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.
வரலாறு
இந்தத் தீவில் 16ஆம் நூற்றாண்டு வரை யாரும் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 16 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகே இங்கு மக்கள் வரத் தொடங்கினர். முதன் முதலாகப் போர்த்துக்கேயர், இந்தத் தீவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, டச்சு நாட்டவரும் இங்கே ஆட்சி செய்தனர். பின் பிரான்ஸ் தேசத்தின் கீழ் இந்தத் தீவு வந்தது. கடைசியாக, இந்தத் தீவை பிரித்தானியர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து இந்தத் தீவு 1968 மார்ச் 12ம் திகதி சுதந்திரம் பெற்றது.
ஆகவே இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது. இங்குள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள். முக்கியமாக, ஆசியாவிலிருந்தும் ஐரோப்பியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த மக்களே இங்கே குடியேறினர்.
இந்தத் தீவுக்கும் இலங்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. நம்மையும் பிரித்தானியர்கள் ஆண்டார்கள். இந்தக் குட்டித் தீவையும் அவர்களே ஆண்டார்கள். பிரித்தானியர்களிடமிருந்தே இலங்கையும் மொரிஷியஸ¤ம் விடுதலை பெற்றன.
மொரிஷியத் தீவின் முதல் பிரதம மந்திரி, சர் சிவசாகர் இராம்குலாம், அவரே அந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய காரணகர்த்தர், அந்த நாட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். அவருடைய தலைமையின் கீழ்தான், இரத்தம் சிந்தாமல் மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
இந்தத் தீவுக்கு முதலில் வந்தவர்கள், நிறைய அடிமைகளைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அடிமை வியாபாரம் மிகுதியாக நடைபெற்றது காரணம் பிரெஞ்சுக்காரர்களே. இவர்கள், அடிமைகளை வாங்கி விற்பதையும் அவர்களை வைத்துக் கடுமையாக வேலை வாங்குவதையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தார்கள்.
அடிமைகளைக் கொடூரமாக நடத்தியது. மொரிஸியஸ் வரலாற்றின் கருப்புப் பகுதியாகும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அடிமைகள் விடுதலை பெற்றனர்.
இந்திய வம்சாவளியினர்
அதன் பின் நாட்டிலே தேயிலையும் கரும்பும் விளைவிக்கப் பிரரெஞ்சு அரசும் அதன் பின் வந்த பிரிட்டிஷ் அரசும் முயன்றன. இங்கே கடுமையாக உழைக்க, நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பான்மையானவர்களை பிரெஞ்சு அரசும் பிரிட்டிஷ் அரசும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்தன.
இந்தியாவின் கேரளம், வங்காளம், புதுச்சேரி, மராட்டியம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இவர்களைக் கொண்டு வந்தன. அப்படி வந்த இவர்களைத் தேயிலைத் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் வேலைக்கு அமர்ந்தினர்.
இந்த நாட்டின் 55 விழுக்காட்டினர். இந்திய வம்சாவளியினர், மொரிஷியஸ் தீவு. இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறது. அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்பு இல்லை.
இதனா இந்தியர்களுக்கு அவர்களின் தாய்நாட்டுடன் கூடிய தொடர்பு, வெகுவாகப் பாதிக்கப்பட்டது. எனவே இந்திய வம்சாவளியினர், மொரிஷியசில் இருந்த பழக்க வழக்கங்களையே ஏற்று, அதன்படி வாழத் தொடங்கினார்கள்.
அப்படி வாழும் இந்தியர்கள் இன்றைய மொரிஷியஸ் மக்கள் தொகையில், 55 வீதம் ஆவார்கள். இந்த நாட்டின் பணம், ரூபாய் என்ற பெயரிலேயே வழங்கப்பெறுகிறது. மொரிஷியஸ¤ ரூபாய்த் தாளில் அந்த ரூபாயின் மதிப்பு, தமிழ் எண்களிலும் எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மொரிஷியஸில் இந்துக் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரியை, மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்கே உள்ள சிவன் கோவில் ஒன்றில் அந்த நாளில் பல இலட்சம் பேர் கூடி வழிபடுகின்றனர். இங்குள்ள காளி கோவிலில் தீமிதி நடக்கிறது. சிறிய குன்றின் மேலே முருகன் கோவில் இருக்கிறது. தைப்பூச விழாவை, மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். காவடி எடுத்து, அலகு குத்தி, முருகனை வழிபடுவதைக் கண்டால், நமக்கு வியப்பு மேலிடும்.
மொரிஷியஸில் தேவாரம் படிக்கின்றனர். தமிழில் வாசித்தாலும் அவர்களுக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. தேவாரத்தைப் பிரெஞ்சு மொழியில் எழுதியே வாசிக்கின்றனர். தமிழ்ப் பெயர்கள் அனைத்து பிரெஞ்சு மொழியைச் சார்ந்த பெயர்களாகத் திரிந்துள்ளன. பிறர் தங்களை எளிதில் அழைக்க ஏதுவாக இவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
மொரிஷியஸில் மக்களாட்சி அடிப்படையிலான அரசாட்சி நடைபெறுகிறது. முறையான சுதந்திரமான தேர்தல்களை நடத்துகிறார்கள். இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே பிரதமராகச் செயலாற்றும் வாய்ப்பு உள்ளது.
பூலோகச் சொர்க்கம்
இந்தத் தீவு, மிக அழகானது. இதன் அழகை வர்ணிக்கும்போது, இறைவன், மொரிஷியத் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான், என்று பெருமையாகச் சொல்வர்கள். அவ்வளவு அழகிய கடல். இந்தக் கடலின் பல இடங்களில் ஒரு குண்டூசியைப் போட்டாலும் அதைப் பார்த்து எடுத்துவிடலாம். அந்த அளவுக்குத் தெளிவான தண்ணீர்.
சில இடங்களில் நீங்கள், கரையிலிருந்து கடலுக்குள் ஒரு கி.மீ நடந்தாலும் இடுப்பளவு நீரிலேயே இருப்பீர்கள். கடல் மீன்களும் கடல் அழகும் உங்களைக் கவரும். இந்த நாட்டில் உல்லாசப் பயணிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். காரணம், அந்தக் கடல், அவர்களை அவ்வளவு ஈர்க்கிறது. கடற்கரையை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக் காக்கின்றனர்.
மொரிஷியசில் அழகிய அருவி ஒன்றும் உள்ளது. பல வித நிறங்களில் மணல் உள்ளது. குறிப்பிட்ட ஓரிடத்தில் எட்டு நிறங்களில் மணல் உள்ளது என்றால் நம்புவீர்களா?
மொரிஷியஸில் ஒரு காலத்திலே அதிகமான தீப்பிழம்புகள் இருந்தன. அந்தத் தீப்பிழம்புகள், கற்பாறைகளாக உறைந்துள்ளமையை இன்றும் காணலாம்.
தொழில் வளர்ச்சி
மொரிஷியஸில் முதலில் தேயிலையை அதிகமாகப் பயிரிட்டனர். ஆயினும் அந்தத் தேயிலைக்கு உலகச் சந்தையில் அதிக மதிப்பு கிட்டவில்லை. எனவே தேயிலையைத் தங்கள் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு. கரும்பையே அதிகமாகப் பயிரிடுகிறார்கள்.
மொரிஷியஸில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கரும்புத் தோட்டங்களையே காணலாம். இந்தக் கரும்புகள், கரும்பு ஆலைகளில் சர்க்கரையாக மாறி, உலகச் சந்தையில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. கரும்பும் சர்க்கரையும் மொரிஸியஸின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மொரிஷியஸில் தைத்த ஆடைத் தொழிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மொரிஷியஸின் ஆடைத் தொழிலில் இலங்கையிலிருந்தும் சுமார் 4 ஆயிரம் பேர்கள் கடமை ஆற்றுகிறார்கள்.
உல்லாசப் பயணிகளின் உடனடித் தேர்வு
மொரிஷியஸ் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை அழகுறக் கட்டியுள்ளனர். இவை, மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்தவை. ஒரு நாளைக்கு ஓர் அறைக்குச் சுமார் 40-50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாடகைக் கட்டணம் அமைந்துள்ளது. அவ்வளவு அழகான கடலும் கடற்கரையும் இருப்பதால் இவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது. அதிக செலவில் உள்ள அறைகளைப் போலவே குறைந்த செலவிலும் அறைகள் உள்ளன.
கடல் நீர் தொடர்புடைய பல்வேறு விளையாட்டுகள், இங்கே உள்ளன. பல்வேறு விசைப் படகுகளில் பயணிக்கலாம். விமானத்திலிருந்து பராசூட் அணிந்துகொண்டு, தண்ணீரில் குதிக்கலாம். கடலுக்கு அடியில் நடக்கலாம். இவ்வாறு உல்லாசப் பயணிகளுக்குப் பலவித விநோதங்கள் இங்கே உள்ளன. இவை, அவர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
இந்தச் சிறிய தீவுக்கு ஓர் ஆண்டுக்கு, இப்பொழுது 9 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகிறார்கள். இலங்கைக்கோ, இந்த நல்ல சூழ்நிலையில் 8 இலட்சம் பேர்கள் மட்டுமே வருகிறார்கள். இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஓர் ஆண்டுக்கு 20 இலட்சமாக உயர்ந்த, மொரிஷியஸ் அரசு முயன்று வருகிறது.
இலங்கையிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் புது மணத் தம்பதியினர் அநேகமானோர், தங்கள் தேனிலவுக்காக மொரிஷியஸ¤க்குச் செல்வது வழக்கமாகி வருகிறது. மனத்திற்கு மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் தங்கள் தேனிலவைக் கழிக்கலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
இலங்கையில் கெளரவத் தூதரகம்
மொரிஷியசின் கெளரவத் தூதரகம், இலங்கைத் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் செயல்படுகிறது. இலங்கையிலிருந்து மொரிஷியஸ் செல்ல விரும்புவோர். தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால், இந்தத் தூதரகத்திலேயே மொரிஷியசுக்குள் நுழைய அனுமதியை (விசா)ப் பெறலாம்.
மொரிஷியஸ் தீவை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. சிங்கப்பூர், சென்னை, மும்பை, டில்லி, துபாய் ஆகிய மாநகரங்களின் வழியே செல்லலாம். இவற்றுள் துபாய் வழியே தினமும் மொரிஷியஸ¤க்குச் செல்லும் வசதி உண்டு.
இலங்கையிலிருந்து துபாய் செல்ல, 4 மணி நேரம் ஆகும். துபாயிலிருந்து மொரிஷியஸ¤க்குச் செல்ல 6 மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து வாரம் ஒரு முறை, மொரிஷியஸ¤க்குச் செல்ல விமானம் இருக்கிறது. இது, சுமார் 7 மணி நேரப் பயணமாகும். பயணக் கட்டணம் சுமார் 80 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை இருக்கும். இந்த அழகிய தீவுக்கு நீங்களும் ஒரு முறை சென்று, அனுபவித்து வரலாமே.
கெளரவ தூதுவரின் செய்தி
உலகப் படத்திலே மொரிஷியஸ் தீவு ஒரு புள்ளி ‘கடுகு சிறிதானாலும் காரம் பெரிது’ என்று சொல்வது போல் இந்த சிறிய மொரிஷியஸ் தீவு பல பெருமைகளை உள்ளடக்கியது. இலங்கை தீவுக்கும் மொரிஷியஸ் தீவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு இந்திய மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். மொரிஷியஸ் தீவுக்கும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். இரு தீவுகளுமே பிரித்தானியாவிடம் இருந்து தான் சுதந்திரம் பெற்றன.
இரு தீவுகளுக்கிடையே உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இலங்கை இந்தியாவுக்கு மிக சமீபத்தில் இருந்த காரணத்தினாலும், கப்பல் போக்குவரத்து இருந்த காரணத்தினாலும் இலங்கை இந்திய தமிழர்களுக்கு இந்தியாவுடனான தொடர்பு இருந்து வந்தது.
மொரிஷியஸ் தீவில் இருந்து இந்தியா பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தமையாலும், கப்பல் போக்குவரத்து இல்லாமை காரணத்திலும் அங்கு வாழ்ந்த இந்திய மக்களுக்கு தாய் நாட்டுடன் தொடர்பு அற்றுப் போய் விட்டது. அங்கு வாழும் பத்து வீதமான தமிழர்களுக்கு தமிழ் பேசவோ, படிக்கவோ தெரியாது ஆனால் தமிழ் மீது மிகுந்த பற்றுண்டு.
மொரிஷியஸ் தீவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் இல்லாத போது ‘டோடோ’ என்ற வாத்து போன்ற பறவைகள் பல ஆயிரக்கணக்கில் இருந்தன இந்தப் பறவைகளுக்கு பறக்கவோ, ஓடவோ முடியாது. இந்தப் பறவைகளை அங்கு முதலில் வந்த மனித இனம் ஒழித்துக்கட்டியது.
இங்குள்ள எல்லா மக்களுமே எழுத்து அற்ற ‘கிரியோல்’ என்ற மொழியை பேசுகிறார்கள். இந்த மொழிக்கு இலக்கணம் இல்லாத காரணத்தினாலே மொரிஷியஸ் தீவுக்கு வருகின்ற எல்லோருமே இந்த மொழியை சுலபமாக கற்றுக்கொள்கின்றனர்.
இந்தக் குட்டித் தீவிலே இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன என்றால் நம்புவீர்களா? தனி மனித வருட வருமானம் இலங்கை ரூபா ஒன்பது இலட்சத்தையும் தாண்டி நிற்கின்றது.
உலகப் படத்தை உற்று நோக்கினால் தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் அடையாளம் காண முடியும். இந்தத் தீவின் நீளம் 65 கி.மீ, அகலம் 45 கி.மீ இதன் கடற்கரையின் நீளம் 160 கி.மீ, மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.
வரலாறு
இந்தத் தீவில் 16ஆம் நூற்றாண்டு வரை யாரும் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 16 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகே இங்கு மக்கள் வரத் தொடங்கினர். முதன் முதலாகப் போர்த்துக்கேயர், இந்தத் தீவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.அவர்களைத் தொடர்ந்து, டச்சு நாட்டவரும் இங்கே ஆட்சி செய்தனர். பின் பிரான்ஸ் தேசத்தின் கீழ் இந்தத் தீவு வந்தது. கடைசியாக, இந்தத் தீவை பிரித்தானியர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து இந்தத் தீவு 1968 மார்ச் 12ம் திகதி சுதந்திரம் பெற்றது.
ஆகவே இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது. இங்குள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள். முக்கியமாக, ஆசியாவிலிருந்தும் ஐரோப்பியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த மக்களே இங்கே குடியேறினர்.
இந்தத் தீவுக்கும் இலங்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. நம்மையும் பிரித்தானியர்கள் ஆண்டார்கள். இந்தக் குட்டித் தீவையும் அவர்களே ஆண்டார்கள். பிரித்தானியர்களிடமிருந்தே இலங்கையும் மொரிஷியஸ¤ம் விடுதலை பெற்றன.
மொரிஷியத் தீவின் முதல் பிரதம மந்திரி, சர் சிவசாகர் இராம்குலாம், அவரே அந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய காரணகர்த்தர், அந்த நாட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். அவருடைய தலைமையின் கீழ்தான், இரத்தம் சிந்தாமல் மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
இந்தத் தீவுக்கு முதலில் வந்தவர்கள், நிறைய அடிமைகளைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அடிமை வியாபாரம் மிகுதியாக நடைபெற்றது காரணம் பிரெஞ்சுக்காரர்களே. இவர்கள், அடிமைகளை வாங்கி விற்பதையும் அவர்களை வைத்துக் கடுமையாக வேலை வாங்குவதையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தார்கள்.
அடிமைகளைக் கொடூரமாக நடத்தியது. மொரிஸியஸ் வரலாற்றின் கருப்புப் பகுதியாகும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அடிமைகள் விடுதலை பெற்றனர்.
இந்திய வம்சாவளியினர்
அதன் பின் நாட்டிலே தேயிலையும் கரும்பும் விளைவிக்கப் பிரரெஞ்சு அரசும் அதன் பின் வந்த பிரிட்டிஷ் அரசும் முயன்றன. இங்கே கடுமையாக உழைக்க, நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பான்மையானவர்களை பிரெஞ்சு அரசும் பிரிட்டிஷ் அரசும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்தன.
இந்தியாவின் கேரளம், வங்காளம், புதுச்சேரி, மராட்டியம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இவர்களைக் கொண்டு வந்தன. அப்படி வந்த இவர்களைத் தேயிலைத் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் வேலைக்கு அமர்ந்தினர்.இந்த நாட்டின் 55 விழுக்காட்டினர். இந்திய வம்சாவளியினர், மொரிஷியஸ் தீவு. இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறது. அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்பு இல்லை.
இதனா இந்தியர்களுக்கு அவர்களின் தாய்நாட்டுடன் கூடிய தொடர்பு, வெகுவாகப் பாதிக்கப்பட்டது. எனவே இந்திய வம்சாவளியினர், மொரிஷியசில் இருந்த பழக்க வழக்கங்களையே ஏற்று, அதன்படி வாழத் தொடங்கினார்கள்.
அப்படி வாழும் இந்தியர்கள் இன்றைய மொரிஷியஸ் மக்கள் தொகையில், 55 வீதம் ஆவார்கள். இந்த நாட்டின் பணம், ரூபாய் என்ற பெயரிலேயே வழங்கப்பெறுகிறது. மொரிஷியஸ¤ ரூபாய்த் தாளில் அந்த ரூபாயின் மதிப்பு, தமிழ் எண்களிலும் எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மொரிஷியஸில் இந்துக் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரியை, மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்கே உள்ள சிவன் கோவில் ஒன்றில் அந்த நாளில் பல இலட்சம் பேர் கூடி வழிபடுகின்றனர். இங்குள்ள காளி கோவிலில் தீமிதி நடக்கிறது. சிறிய குன்றின் மேலே முருகன் கோவில் இருக்கிறது. தைப்பூச விழாவை, மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். காவடி எடுத்து, அலகு குத்தி, முருகனை வழிபடுவதைக் கண்டால், நமக்கு வியப்பு மேலிடும்.
மொரிஷியஸில் தேவாரம் படிக்கின்றனர். தமிழில் வாசித்தாலும் அவர்களுக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. தேவாரத்தைப் பிரெஞ்சு மொழியில் எழுதியே வாசிக்கின்றனர். தமிழ்ப் பெயர்கள் அனைத்து பிரெஞ்சு மொழியைச் சார்ந்த பெயர்களாகத் திரிந்துள்ளன. பிறர் தங்களை எளிதில் அழைக்க ஏதுவாக இவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
மொரிஷியஸில் மக்களாட்சி அடிப்படையிலான அரசாட்சி நடைபெறுகிறது. முறையான சுதந்திரமான தேர்தல்களை நடத்துகிறார்கள். இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே பிரதமராகச் செயலாற்றும் வாய்ப்பு உள்ளது.
பூலோகச் சொர்க்கம்
இந்தத் தீவு, மிக அழகானது. இதன் அழகை வர்ணிக்கும்போது, இறைவன், மொரிஷியத் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான், என்று பெருமையாகச் சொல்வர்கள். அவ்வளவு அழகிய கடல். இந்தக் கடலின் பல இடங்களில் ஒரு குண்டூசியைப் போட்டாலும் அதைப் பார்த்து எடுத்துவிடலாம். அந்த அளவுக்குத் தெளிவான தண்ணீர்.
சில இடங்களில் நீங்கள், கரையிலிருந்து கடலுக்குள் ஒரு கி.மீ நடந்தாலும் இடுப்பளவு நீரிலேயே இருப்பீர்கள். கடல் மீன்களும் கடல் அழகும் உங்களைக் கவரும். இந்த நாட்டில் உல்லாசப் பயணிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். காரணம், அந்தக் கடல், அவர்களை அவ்வளவு ஈர்க்கிறது. கடற்கரையை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக் காக்கின்றனர்.
மொரிஷியசில் அழகிய அருவி ஒன்றும் உள்ளது. பல வித நிறங்களில் மணல் உள்ளது. குறிப்பிட்ட ஓரிடத்தில் எட்டு நிறங்களில் மணல் உள்ளது என்றால் நம்புவீர்களா?
மொரிஷியஸில் ஒரு காலத்திலே அதிகமான தீப்பிழம்புகள் இருந்தன. அந்தத் தீப்பிழம்புகள், கற்பாறைகளாக உறைந்துள்ளமையை இன்றும் காணலாம்.
தொழில் வளர்ச்சி
மொரிஷியஸில் முதலில் தேயிலையை அதிகமாகப் பயிரிட்டனர். ஆயினும் அந்தத் தேயிலைக்கு உலகச் சந்தையில் அதிக மதிப்பு கிட்டவில்லை. எனவே தேயிலையைத் தங்கள் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு. கரும்பையே அதிகமாகப் பயிரிடுகிறார்கள்.
மொரிஷியஸில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கரும்புத் தோட்டங்களையே காணலாம். இந்தக் கரும்புகள், கரும்பு ஆலைகளில் சர்க்கரையாக மாறி, உலகச் சந்தையில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. கரும்பும் சர்க்கரையும் மொரிஸியஸின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மொரிஷியஸில் தைத்த ஆடைத் தொழிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மொரிஷியஸின் ஆடைத் தொழிலில் இலங்கையிலிருந்தும் சுமார் 4 ஆயிரம் பேர்கள் கடமை ஆற்றுகிறார்கள்.
உல்லாசப் பயணிகளின் உடனடித் தேர்வு
மொரிஷியஸ் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை அழகுறக் கட்டியுள்ளனர். இவை, மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்தவை. ஒரு நாளைக்கு ஓர் அறைக்குச் சுமார் 40-50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாடகைக் கட்டணம் அமைந்துள்ளது. அவ்வளவு அழகான கடலும் கடற்கரையும் இருப்பதால் இவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது. அதிக செலவில் உள்ள அறைகளைப் போலவே குறைந்த செலவிலும் அறைகள் உள்ளன.
கடல் நீர் தொடர்புடைய பல்வேறு விளையாட்டுகள், இங்கே உள்ளன. பல்வேறு விசைப் படகுகளில் பயணிக்கலாம். விமானத்திலிருந்து பராசூட் அணிந்துகொண்டு, தண்ணீரில் குதிக்கலாம். கடலுக்கு அடியில் நடக்கலாம். இவ்வாறு உல்லாசப் பயணிகளுக்குப் பலவித விநோதங்கள் இங்கே உள்ளன. இவை, அவர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
இந்தச் சிறிய தீவுக்கு ஓர் ஆண்டுக்கு, இப்பொழுது 9 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகிறார்கள். இலங்கைக்கோ, இந்த நல்ல சூழ்நிலையில் 8 இலட்சம் பேர்கள் மட்டுமே வருகிறார்கள். இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஓர் ஆண்டுக்கு 20 இலட்சமாக உயர்ந்த, மொரிஷியஸ் அரசு முயன்று வருகிறது.
இலங்கையிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் புது மணத் தம்பதியினர் அநேகமானோர், தங்கள் தேனிலவுக்காக மொரிஷியஸ¤க்குச் செல்வது வழக்கமாகி வருகிறது. மனத்திற்கு மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் தங்கள் தேனிலவைக் கழிக்கலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
இலங்கையில் கெளரவத் தூதரகம்
மொரிஷியசின் கெளரவத் தூதரகம், இலங்கைத் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் செயல்படுகிறது. இலங்கையிலிருந்து மொரிஷியஸ் செல்ல விரும்புவோர். தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால், இந்தத் தூதரகத்திலேயே மொரிஷியசுக்குள் நுழைய அனுமதியை (விசா)ப் பெறலாம்.
மொரிஷியஸ் தீவை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. சிங்கப்பூர், சென்னை, மும்பை, டில்லி, துபாய் ஆகிய மாநகரங்களின் வழியே செல்லலாம். இவற்றுள் துபாய் வழியே தினமும் மொரிஷியஸ¤க்குச் செல்லும் வசதி உண்டு.
இலங்கையிலிருந்து துபாய் செல்ல, 4 மணி நேரம் ஆகும். துபாயிலிருந்து மொரிஷியஸ¤க்குச் செல்ல 6 மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து வாரம் ஒரு முறை, மொரிஷியஸ¤க்குச் செல்ல விமானம் இருக்கிறது. இது, சுமார் 7 மணி நேரப் பயணமாகும். பயணக் கட்டணம் சுமார் 80 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை இருக்கும். இந்த அழகிய தீவுக்கு நீங்களும் ஒரு முறை சென்று, அனுபவித்து வரலாமே.
கெளரவ தூதுவரின் செய்தி
உலகப் படத்திலே மொரிஷியஸ் தீவு ஒரு புள்ளி ‘கடுகு சிறிதானாலும் காரம் பெரிது’ என்று சொல்வது போல் இந்த சிறிய மொரிஷியஸ் தீவு பல பெருமைகளை உள்ளடக்கியது. இலங்கை தீவுக்கும் மொரிஷியஸ் தீவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு இந்திய மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். மொரிஷியஸ் தீவுக்கும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். இரு தீவுகளுமே பிரித்தானியாவிடம் இருந்து தான் சுதந்திரம் பெற்றன.
இரு தீவுகளுக்கிடையே உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இலங்கை இந்தியாவுக்கு மிக சமீபத்தில் இருந்த காரணத்தினாலும், கப்பல் போக்குவரத்து இருந்த காரணத்தினாலும் இலங்கை இந்திய தமிழர்களுக்கு இந்தியாவுடனான தொடர்பு இருந்து வந்தது.
மொரிஷியஸ் தீவில் இருந்து இந்தியா பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தமையாலும், கப்பல் போக்குவரத்து இல்லாமை காரணத்திலும் அங்கு வாழ்ந்த இந்திய மக்களுக்கு தாய் நாட்டுடன் தொடர்பு அற்றுப் போய் விட்டது. அங்கு வாழும் பத்து வீதமான தமிழர்களுக்கு தமிழ் பேசவோ, படிக்கவோ தெரியாது ஆனால் தமிழ் மீது மிகுந்த பற்றுண்டு.
மொரிஷியஸ் தீவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் இல்லாத போது ‘டோடோ’ என்ற வாத்து போன்ற பறவைகள் பல ஆயிரக்கணக்கில் இருந்தன இந்தப் பறவைகளுக்கு பறக்கவோ, ஓடவோ முடியாது. இந்தப் பறவைகளை அங்கு முதலில் வந்த மனித இனம் ஒழித்துக்கட்டியது.
இங்குள்ள எல்லா மக்களுமே எழுத்து அற்ற ‘கிரியோல்’ என்ற மொழியை பேசுகிறார்கள். இந்த மொழிக்கு இலக்கணம் இல்லாத காரணத்தினாலே மொரிஷியஸ் தீவுக்கு வருகின்ற எல்லோருமே இந்த மொழியை சுலபமாக கற்றுக்கொள்கின்றனர்.
இந்தக் குட்டித் தீவிலே இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன என்றால் நம்புவீர்களா? தனி மனித வருட வருமானம் இலங்கை ரூபா ஒன்பது இலட்சத்தையும் தாண்டி நிற்கின்றது.
அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா கடந்த 1977 ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவிய வாயேஜர்- 1 எனும் ஆளில்லா விண்கலம் தற்போது நமது சூரியக் குடும்பத்தின் சாத்திய எல்லைகளை கிட்டத்தட்ட அடைந்தே விட்டது. இந்த இருபத்தி மூன்று வருடங்களில் வாயேஜர்- 1 விண்கலம் சுமார் 14.2 பில்லியன் கிலோமீட்டர்கள் (ஒரு பில்லியன் = நூறு கோடி) பயணம் செய்துள்ளது.

1800 களின் துவக்கத்தில் ஆற்றல் (energy) என்பது பிரபஞ்சமளாவிய ஒரே ஆக்கப் பொருள் என்ற கருத்து இல்லாமலிருந்தது. நெருப்பிலிருந்து வரும் வெப்பமோ, சூரியனிலிருந்து வரும் கதிரோ, வெவ்வேறானவை என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட காலத்தில்தான் நம்ம ஃபரடே காட்சியில் வருகிறார். தன் அளப்பரிய உந்துதலாலும் கூர்ந்து நோக்கும் திறனாலும் சில விஷயங்களை ஆராய முற்பட்டார். மின்சாரம் பாயும் ஒரு கம்பியின் அருகே கொண்டு செல்லப்படும் ஒரு காந்தமுள் கண்ணா பின்னவென்று ஆடி ஏதோ ஒரு திசையில் நிற்பதைக் கண்டு வியந்தார்! இப்படி பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு மின் கம்பியைச் சுற்றி, மின்சார ஓட்டத்துக்கு நேர்கோணத்தில் காந்த வயல் (magnetic field) உருவாகிறது என்பதயும் கண்டுபிடித்தார். அதைப் போலவே ஒரு காந்தத்தைக் கொண்டு மின்சார ஓட்ட திசையையும் மாற்றிக் காட்டினார். இதுதான் உலகின் முதல் மின்சார மோட்டார்!மின் சக்தியும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றும் நிலைநாட்டினார். இப்படியாக மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவு பிறந்தது! இங்கிருந்துதான் ஐன்ஸ்டைன், ஆற்றல் என்பது ஆக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்று; ஆனால் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறக்கூடியது என்பதைப் பயன்படுத்திக்கொண்டார்.
அன்டோனி லாரென்ட் லவோயிசியர் எனும் அமெச்சூர் வேதியல் விஞ்ஞானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, வரி வசூலிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஒரு செல்வச் சீமான். இவரின் வேதியல் பங்களிப்பு அமெச்சூர் தனமானது என்று கூறப்பட்டாலும், இவரை நவீன வேதியலின் தந்தை என்றும் கூறுவர். இவரே ஆக்சிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் நாமகரணம் சூட்டியவர். இவை இரண்டும் சேர்ந்தால்தான் தண்ணீர் என்பதைக் கூறி, மனிதன் நிலவு வரை செல்ல சிவப்புக் கம்பளம் விரித்தவர். இவரது அயராத உழைப்பால் இவர் உலகுக்கும் குறிப்பாக ஐன்ஸ்டைனுக்கும் உணர்த்திய உண்மை.... ஆற்றலைப்போலவே, வேறு எந்தவித மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது! அவரின் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, ஒரு(மரக்) கட்டை எரியூட்டப்பட்டால், அதிலுள்ள ப்லோகிஸ்டன் (phlogiston) எனும் பொருளின் மூலமாக, அப்பொருளின் நிறை, நிரந்தரமாக வெளியேறிவிடுகிறது. ஆகவேதான் உபரியாகக் கிடைக்கும் சாம்பலின் எடை, ஒரிஜினல் மரக்கட்டையின் எடையைவிட குறைந்துகாணப்படுகிறது என்று எல்லா அறிவியலாளரும் நம்பினர். அப்போதுதான் லவோயிசியர், தன் அயராத உழைப்பினாலும், அறிவார்ந்த தன் மனைவியின் உதவியோடு, எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தாலும் ஒரு பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது... ஒரு வேதியல் சமன்பாட்டின் இரு பக்கங்களும் எப்போதும் சமமாக இருக்கும் என்பதையும் நிரூபித்தார். அவரின் இந்தக் கண்டுப்பிடிப்பே ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையில் முக்கியப் பங்காற்றியது. ஆனால் இதுவே இவரின் கடைசி கண்டுப்பிடிப்பாக ஆகிவிட்டது. பிரெஞ்சு மக்களுக்கு விடிவெள்ளியாக வந்த புரட்சி, இவருக்கு முற்றுப் புள்ளியாக மாறிப்போனது. இவர் பணக்கார வர்கத்தின் பிரதிநிதி என்பதால், பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது நடந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கம் இவரைக் குறமற்றவர் என்று பிரகடனப்படுத்தியது. அதன்பின், அவரின் சில உடைமைகளை அவரின் மனைவியிடம் அளிக்கப்பட்டபோது, அதன் மீது ஒரு துண்டுச் சீட்டில் 'தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட லவோயிசியரின் விதவைக்கு....' என்று எழுதிருந்தது! பாவம். என்ன ஒரு சோகம்?
எல்லாம் சரி. ஆற்றலும், நிறையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அதனால் அவை சமன் பாட்டில் இடம் பிடித்துள்ளன. ஆனால் இந்த ஒளி எப்படி உள்ளே வந்தது? மிக மிக வேகமாகச் செல்லுவதற்கு லத்தீன் மொழியில் செலிரிட்டஸ் (celeritas) என்று அழைக்கப் படுகிறது. மனிதன் அறிவுக்கு எட்டியவரை மிக வேகமாக செல்லக் கூடியது ஒளி மட்டுமே. வினாடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள்! இங்கே மீண்டும் மைகேல் ஃபாரடே உள்ளே வருகிறார். ரொம்பக் காலமாகவே அவர் ஒளியும் மின்சாரத்தைப் போலவும் காந்தப்புலத்தைப் போலவும் மின்காந்தவியலைச் சார்ந்ததுதான் என்று உறுதியாக நம்பினார். ஆனால் அதைக் கணிதத்தனமாக நிரூபிக்க தேவையான எண்கணித அறிவு அவரிடம் போதியதாக இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு படிக்காத மேதைதானே! இந்த இடத்தில்தான் நன்கு படித்த கணிதத்தில் புலியான ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் எண்ணு இளைஞர் வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து, மின்சாரத்திலிருந்து காந்தப் புலமும் காந்தப் புலத்திலிருந்து மின்சாரமும்... ஒரு குறிப்பிட்ட வேகத்திலிருக்கும் போது உண்டாகும். அந்த வேகம்தான் ஒளியின் வேகம்; அது எப்போதும் மாறாது என்று எண் கணிதம் மூலமாக உலகுக்கு நிரூபித்தனர். இதையும் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் சேர்த்துக்கொண்டார். ஒளியின் வேகம் மாறாது என்றால், வேறு ஏதோ ஒன்று மாறித்தான் ஆகவேண்டும். அது நிறை. ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது அதன் நிறை அதிகரிக்கும் என்றும் அது அதன் ஆற்றலை சார்ந்திருக்கும் என்பதையும் குறித்துக் கொண்டார்.
இந்த மகா சமன்பாட்டில் உள்ள ஒரே எண் '2'. அதுவும் நேர் அர்த்தத்தில் இலை. 'அடுக்கு' என்ற முறையில் உள்ளது. ஒளியின் வேகம் என்ற ஒரு எண் அதே எண்ணால் பெருக்கப் படவேண்டும். 670 மில்லியன் X 670 மில்லியன் ( மணிக்கு 670 மில்லியன் மைல்கள் ). அந்த தொகை எவ்வளவு என்று தெரியுமா? 448,900,000,000,000,000. சரி இருக்கட்டும். ஏன் அந்த 2 அடுக்கு?(Square?).
ஒரு நகரும் பொருளுக்கு ஆற்றல் உண்டு. ஒரு பந்து, அதே போன்ற பந்தைவிட இரு மடங்கு வேகத்தில் சென்றால், அதன் ஆற்றலும் இரு மடங்கு இருக்கும் என்பது நியூட்டனின் கூற்று. ஆனால் நம்ம எமிலி மேடம் கூறுகிறார், அதன் ஆற்றல் நான்கு மடங்கு இருக்குமென்று! சொல்வதோடு நிற்கவில்லை. அதை ஒரு சிறு பரிசோதனை மூலம் நிரூபிக்கவும் செய்தார். சிறு ஈய குண்டுகளை குறிப்பட்ட உயரத்தில்லிருந்து, மிருதுவான களிமண் மீது போட்டு, அது எவ்வளவு தூரம் உள்ளே பதிகிறது என்று அளந்து கணக்கிட்டார். அப்போதுதான் அந்த களிமண்ணின் மீது போடப்பட்ட குண்டுகளின் ஆற்றல் அவைகளின் வேகத்தின் இரண்டு மடங்காக இல்லை, இரண்டு அடுக்காக (SQUARE) இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டு, ஆணானப்பட்ட (இதற்கு மாற்றுச் சொல் கிடைக்குமா?) நியூட்டன் சொன்ன ஒரு விதி மறைந்து போனது இந்தப் பெண்ணால்! இதைத்தான் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் உபயோகப்படுத்திக்கொண்டார்.