Wednesday 16 March 2011

சூரியக் குடும்பத்தின் எல்லையை நெருங்கும் வாயேஜர்!


அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா கடந்த 1977 ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவிய வாயேஜர்- 1 எனும் ஆளில்லா விண்கலம் தற்போது நமது சூரியக் குடும்பத்தின் சாத்திய எல்லைகளை கிட்டத்தட்ட அடைந்தே விட்டது. இந்த இருபத்தி மூன்று வருடங்களில் வாயேஜர்- 1 விண்கலம் சுமார் 14.2 பில்லியன் கிலோமீட்டர்கள் (ஒரு பில்லியன் = நூறு கோடி) பயணம் செய்துள்ளது.

விண்வெளியில் அது பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு பதினேழு  கிலோமீட்டர்கள். பிரம்மாண்டமான இந்த பேரண்டத்தில் நம்மை தவிர வேறு
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்ற மனித குலத்தின் விடையில்லா கேள்விகளுக்கு விடை தேடி ஏவப்பட்ட இந்த விண்கலத்தில் மனித இனத்தின் செய்திகள் தங்கத் தகடு மற்றும் ஆடியோ வடிவிலும், சூரியக் குடும்பத்தின் வரைபடம் அதில் ப்போமியின் இடம் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தனை தூரத்திலிருந்து ஈனஸ்வரத்தில் இன்னும் சிக்னல்களை நமக்கு அது அனுப்பிக்கொண்டே உள்ளது. அதை வைத்து அது தற்போது இருக்குமிடத்தை விஞ்ஞானிகள் அறிகின்றனர். தற்போது அது டெர்மினேஷன் ஷாக் எனப்படும் சூரிய மண்டலத்தின் வெளி எல்லையினை அடைந்து விட்டது. சூரிய மண்டலமெங்கும் வீசும் சூரியப் புயல் பூடோ கிரகத்தினை எல்லாம் தாண்டி ஒரு இடத்தில் சட்டென்று குறைகிறது. அதுவே சூரிய மண்டல எல்லை என்று கணிக்கப்படுகிறது.

வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
கடந்த ஜூன் மாதம் வாயேஜர் அனுப்பிய சமிக்ஞைகள் அது பயணிக்கும் இடத்தில் சூரிய காற்றின் வேகம் பூஜ்யம் என்று காட்டியது. அதை வைத்து இன்னும் சில வருடங்களில் வாயேஜர் சூரிய மண்டலத்தினைக் கடந்து பேரண்டத்தினுள் பிரவேசிக்கும் என்று விஞ்ஞானிகள் அறிகின்றனர்.

இதைப் போல வாயேஜர் 2 எனும் இன்னொரு ஆளில்லா விண்கலத்தை வாயேஜர்- 1க்கு எதிர்ப்புறமாக அதே 1977 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாசா ஏவியது. வினாடிக்கு பதினைந்து கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதற்கும் இம்மாதிரி விளைவினை இன்னும் சில வருடங்களில் சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

No comments: