Sunday 13 March 2011

2036-ல் அப்போஃபிஸ் கோள் பூமியைத் தாக்கலாம்


Apophis asteroid could hit the earth in 2036அப்போஃபிஸ் என்ற சிறிய கோளானது பூமியைத் தாக்க இருப்பதாக ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பூமியுடன் மோதலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை கண்டறிந்துள்ளனர்.

அப்போஃபிஸ் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி சுமார் 37,000 முதல் 38,000 கிலோ மீட்டர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும், 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவித்தார். சிலவேளை மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 -ல் 1 பங்கு என்ற வாய்ப்பே உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதை தவிர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆராய்வதிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்

No comments: