Sunday 13 March 2011

பெர்முடா முக்கோணம்

வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும், பெர்முடா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின் இயல்பு வியப்பானத்தும் அச்ச மூட்டக் கூடியதும் ஆகும்.




இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன் காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும், இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 கப்பல்களும், 20 விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முடா முக்கோணத்தின் பரப்பினைக் (இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாய் மறைவதும்,பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும் உல கின் மிகப்பெரிய வினாவாக நம் முன் காட்சி அளிக்கின்றன.




உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலன்டைன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை, அவை அதே இடத்தில் வேறுபரிமாணதில் இருக்கின்றன என்று கூறுகிறார்.

அமெரிக்க நாட்டின் மேதை எட்கர் கேஸ், தம் அபூர்வமான சோதிடத் திறமையின் மூலம் அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்து கிடக்கிற அட்லாண்டிக் நகரம் ஒரு சக்தி மையத்தால் கடலுக்கு அடியில் வாழ்பவர்களால்
இழுத்துச்செல்லப் பட்டது என்றும், அவர்களால் அந்த நகரத்தை மறுபடி மேலே வரச்செய்ய இயலும் என்றும்
எழுதியிருக்கிறார்.



படிகங்களிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில் வரும் விமானங்களையும் கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்கு மாற்றிக் காற்றில் மாயமாய் மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள முடியாததாய் உள்ளது.

பெர்முடா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுரம் உள்ள(பூமி உருண்டையில் சரியாக அதன் மறுமுனை) ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி 'பிசாசுக் கடல்' என்றே வெகு காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல! இங்கேயும் பல கப்பல்கள் மாயமாய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு (மேக்னடிச் வெரியடியொன்) மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்கவேண்டும்.



அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (சோங்கேலெட் எனெர்க்ய்) மறுவடிவம் என்றும்
இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில் உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில் திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத் தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற பரமாணுக் களாக மாறிக் காற்றில்கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

பெர்முடா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக இருக்கலாம என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது பரிமாணம் என்கிறார்கள்
விஞ்ஞானிகள்.




இதன் மர்மம் புரியாத உலகம் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், தெரியாத காலச் சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கதைகள் பல சிறகுகளுடன் டிராகுலா வாக விஸ்வரூபமெடுத்துப் பறக்கிறது.
விரிந்து பரந்து கிடக்கும் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் கூடாரமாகக் கிடக்கிறது. இன்னும் விஞ்ஞானமோ, பெரும் அறிவியலார்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத வியப்புகளின் கூட்டுத் தொகையாக இருக்கிறது நமது பூமி எனும் அதிசயம்.

No comments: