Sunday 13 March 2011

சந்திரன் சுருங்குகிறது

Moon is shrinking - scientistsசந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.
இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சந்திரன் பூமியை விட குறுக்களவில் நான்கில் ஒரு பகுதி அளவுடையது. தற்போது அது சுருங்கி வருவதால் முற்றிலும் அழியும் நிலை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: